​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயர் பண மதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று 2 மாதங்களாகிவிட்டன - தேசிய புள்ளியியல் ஆணையம்

Published : Jan 30, 2019 3:18 PM

உயர் பண மதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று 2 மாதங்களாகிவிட்டன - தேசிய புள்ளியியல் ஆணையம்

Jan 30, 2019 3:18 PM

உயர் பண மதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து 2 மாதங்களாகியும் மத்திய அரசு அதை வெளியிட அனுமதிக்கவில்லை என தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் இருவர் பதவிவிலகியுள்ளனர்.

தன்னாட்சி அமைப்பான தேசிய புள்ளியியல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்திய புள்ளியியல் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. அதன் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட P.C. மோகனனும்,  டெல்லி பொருளியல் பள்ளி பேராசிரியர் J.V. மீனாட்சியும் ஆணைய உறுப்பினராக இருந்தனர்.

இவர்கள், உயர் பணமதிப்பிழப்பு காலத்தை உள்ளடக்கிய 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரை வேலைவாய்ப்பு குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட ஒப்புதல் அளித்தனர்.

பொதுவாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் வெளியாகும் என்ற நிலையில், 2 மாதங்களுக்கு மேலாகியும் மத்திய அரசு அதை வெளியிடுவதில் முனைப்பு காட்டவில்லை என்றும், முக்கிய முடிவுகளை எடுக்கையில் ஆணையத்தை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை எனவும் பதவி விலகியவர்களில் ஒருவரான மோகனன் குறிப்பிட்டுள்ளார்.