​​ 100 கோடி டிரிப்புகளை கையாள விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் – அருண்ஜேட்லி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 கோடி டிரிப்புகளை கையாள விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் – அருண்ஜேட்லி

100 கோடி டிரிப்புகளை கையாள விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் – அருண்ஜேட்லி

Feb 01, 2018 3:35 PM

ஆண்டுக்கு நூறு கோடி சேவைகளைக் கையாளும் வகையில் இந்திய விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் விமான நிலையங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தற்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 124 விமான நிலையங்கள் உள்ளதாகவும் ஆண்டுக்கு நூறு கோடி விமான சேவைகளைக் கையாளும் வகையில் விமான நிலையங்களின் திறன் 5 மடங்கு உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

உடான் திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படாமல் உள்ள 56 விமான நிலையங்களும், 31 ஹெலிபேடுகளும் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.