​​ அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள்: அருண் ஜேட்லி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள்: அருண் ஜேட்லி

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள்: அருண் ஜேட்லி

Feb 01, 2018 3:31 PM

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு மேலும்1 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், 2022 ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு எட்டப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை திட்டங்களுக்கு 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகக் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். ஜவுளித்துறைக்கு 7 ஆயிரத்து 140 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டப்படும் எனவும், முத்ரா திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி எளிமையாக்கப்படும் எனவும், அவற்றின் வரிச்சுமை குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் முக்கிய நோக்கம் எனவும், இபிஎஃப் திட்டத்தில் சேரும் புதிய ஊழியர்களுக்கு 12 சதவீதத்தை 3 ஆண்டுகளுக்கு அரசு பங்களிப்பாக வழங்கும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்தும் முறை எலக்ட்ரானிக் முறைக்கு மாற்றப்படும் எனவும், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் செல்லத்தக்கவை அல்ல எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கிரிப்டோ கரன்சிக்களின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தும் எனவும், அத்தகைய பரிமாற்ற முறைக்கு தடை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும் எனவும், பாதுகாப்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.