​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு வனத்துறையினர் தடை

Published : Jan 25, 2019 4:51 PM

குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு வனத்துறையினர் தடை

Jan 25, 2019 4:51 PM

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து மூன்று மாதங்களுக்கு குரங்கணியில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடும் கட்டுப்பாடுகள் உடன் மலையேற்றம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இந்நிலையில் பெரியகுளம் மற்றும் லட்சுமிபுரத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஆங்காங்கே இரு தினங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதனால் குரங்கணி டாப்ஸ்டேசன் பகுதிக்கும் தீ பரவக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேற்றத்துக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.