​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
’1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது’ என்ற ராஜீவ் காந்தியின் கருத்து குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

Published : Jan 22, 2019 3:35 PM



’1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது’ என்ற ராஜீவ் காந்தியின் கருத்து குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

Jan 22, 2019 3:35 PM

மத்திய அரசு திட்டங்களில் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைவதாகவும் எஞ்சிய 85 சதவீதம் வீணாவதை தடுக்க முடியவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து காங்கிரஸ் ஆட்சியின் திறன் இன்மைக்கு சான்றாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த கடைசி நேரம் வரை இந்தக் குறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

தமது ஆட்சியில் 5 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் மக்களுக்கு முழுமையாக சென்றதாகவும், இதுவே முந்தைய நடைமுறையாக இருந்தால் 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் காணாமல் போயிருக்கும் என்றும் தெரிவித்தார்.