​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு

Published : Jan 22, 2019 3:28 PM



குட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு

Jan 22, 2019 3:28 PM

குட்கா விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வருமான வரித்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

குட்கா வழக்கில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பா வருமான வரித்துறை அனுப்பிய எந்த ஆவணமும் இல்லை என தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அது தொடர்பான ஆவணங்கள் சசிகலா அறையில் வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டிருந்தது.

முந்தைய விசாரணையின் போது வருமான வரித்துறையினர் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியது  தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில்  தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது தமிழக தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வருமான வரித்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.