​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த அறிக்கை அளிக்க ஆணை

Published : Jan 22, 2019 3:20 PM



அரசு நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த அறிக்கை அளிக்க ஆணை

Jan 22, 2019 3:20 PM

அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 4 வார அவகாசம் வழங்கியுள்ளது.

கோவை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை அகற்றவும், அரசு நிலங்கள், சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாதென்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடக் கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் 2005-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடவுளாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாதென்றும், அரசு நிலங்களை அபகரிக்கும் நோக்கில் கோயில்கள் கட்டப்படுவதாகவும்  வேதனை தெரிவித்திருந்தார். மேலும், அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஆணையிட்டிருந்தார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 12 மாநகராட்சி, 125 நகராட்சி, 528 பேரூராட்சி ஆகியவற்றில் விவரங்களைப் பெற, அரசுத்தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, 4 வாரங்கள் அவகாசம் வழங்கி ஆணையிட்டார்.