​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்பட விவகாரத்தில்,நீதிமன்றம் கண் மூடிக்கொண்டிருக்காது

Published : Jan 22, 2019 3:12 PM



பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்பட விவகாரத்தில்,நீதிமன்றம் கண் மூடிக்கொண்டிருக்காது

Jan 22, 2019 3:12 PM

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்பட விவகாரத்தில், நீதிமன்றம் கண் மூடிக்கொண்டிருக்காது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பால் கலப்பட வழக்குகளை சிபிஐ விசாரனைக்கு மாற்ற உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் முன், இன்று, மீண்டும், விசாரணைக்கு வந்தது.

அப்போது, கலப்பட பால் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பாலில், கலப்படம் செய்வது என்பது ஆரோக்கிரத்திற்கு விடுக்கப்படும் மிரட்டல் என்பதால், இதில் நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்காது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், தமிழகம் முழுவதும் பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை? எவ்வளவு?., அந்த வழக்குகளின் வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள், தண்டனை பெற்றவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக வரும் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விவரங்களை தருவதில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும் பால் கலப்படம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும்படி கீழமை நீதிமன்றங்களை அறிவுறுத்த தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தரமான பால் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பாலின் தரம், அதனை பரிசோதிக்கும் ஆய்வகம், விற்பனை மையங்கள், உணவுப்பாதுகாப்பு துறை நடவடிக்கைகள் என அனைத்தையும் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.