​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக அளவில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்

Published : Jan 22, 2019 2:47 PM



உலக அளவில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்

Jan 22, 2019 2:47 PM

சூரிய மின்சக்தி உற்பத்தி உள்பட பல துறைகளில் உலக அளவில் இந்தியா முன்னோடியாக இருப்பதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பின்னர், இந்தியாவின் வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பு மூலம் ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றை உருவாக்க முயற்சிப்பதாக கூறினார்.

உலக அளவில் பல துறைகளில் இந்தியா முன்னோடியாக இருப்பதாக கூறிய மோடி, கடந்த நான்கரை ஆண்டுகளில் 5 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயை, பல்வேறு திட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை விரைந்து பெற, உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களோடு, பாஸ்போஸ்ட் சேவா திட்டம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். தற்போது மற்றொரு திட்டமாக, மின்னணு பாஸ்போர்ட் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.