​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தம்பிதுரையிடம் சுமார் 4 மணி நேரம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

Published : Jan 22, 2019 2:46 PM

தம்பிதுரையிடம் சுமார் 4 மணி நேரம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

Jan 22, 2019 2:46 PM

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தம்பிதுரை கூறி இருந்தார். இதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இதன்படி, காலை 10.20 மணி அளவில், சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் தம்பிதுரை விசாரணைக்கு ஆஜரானார். சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்லும் திட்டம் இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தம்பிதுரை  ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், அப்போலோ மருத்துவமனை அளித்த சிகிச்சையில் தங்களுக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை என தம்பிதுரை கூறியதாக குறிப்பிட்டார்.