​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் டிவிட்டரில் பதிவு

Published : Jan 22, 2019 1:03 PM

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் டிவிட்டரில் பதிவு

Jan 22, 2019 1:03 PM

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.   பாமகவின் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து, ஊடகங்கள் கற்பனைக்குதிரையில் சவாரி செய்து, உண்மையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டுமென, ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ட்விட்டரில் இதனை பதிவிட்டுள்ள அவர், கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கூட்டணி பற்றி முடிவெடுத்தவுடன், அதனை வெளிப்படையாக அறிவிப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.