​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூசிலாந்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம்

Published : Jan 22, 2019 10:56 AM

நியூசிலாந்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம்

Jan 22, 2019 10:56 AM

இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்களுக்கான கோப்பைகளை அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்தனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய ஆண்கள் அணியும், மித்தாலி ராஜ் தலைமையிலான பெண்கள் அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகின்றன.

ஆண்கள் அணிக்கான தொடர் வரும் 23ஆம் தேதியும், பெண்கள் அணிக்கான தொடர் 24ஆம் தேதியும் தொடங்குகின்றன. இதற்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேப்பியரில் நடைபெற்றது.

இந்தியா- நியூசிலாந்து ஆண்கள் அணி தொடருக்கான கோப்பையை விராட் கோலி, கேன் வில்லியம்சன் அறிமுகம் செய்து வைத்தனர். பெண்கள் அணித் தொடருக்கான கோப்பையை மித்தாலி ராஜ் - ஏமி சேட்டர்வைட்டும் (Amy satterwaite) அறிமுகப்படுத்தினர்.