​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை அரசுத் தரப்பு மனு தாக்கல்

Published : Jan 22, 2019 7:41 AM



மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை அரசுத் தரப்பு மனு தாக்கல்

Jan 22, 2019 7:41 AM

மேகாலயாவில் சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மத்திய, மாநில அரசுகள் உச்சீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நிலக்கரி சுரங்கத்தினுள் வெள்ளம் பாய்ந்ததில் 15 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். ராட்சத மோட்டார்கள் மூலம் 2 கோடி லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஒரு மாதமாக கடுமையாகப் போராடியும் ஓரிரு எலும்புக்கூடுகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தொழிலாளர்கள் அனைவருமே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.