​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராகுல் பிரதமர், ஸ்டாலின் முதலமைச்சர் என்ற நிலை விரைவில் வரும் - திருநாவுக்கரசர்

Published : Jan 21, 2019 5:16 PM



ராகுல் பிரதமர், ஸ்டாலின் முதலமைச்சர் என்ற நிலை விரைவில் வரும் - திருநாவுக்கரசர்

Jan 21, 2019 5:16 PM

நாட்டின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழக முதலமைச்சராக முக. ஸ்டாலினும் பதவியில் இருக்கும் நிலை விரைவில் வரும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்களுடன் பேசவும், அவர்களது கருத்துக்களை அறியவும் சக்தி என்ற செயலியை ராகுல் காந்தி அறிமுகப்படுத்தியுள்ளார்.  இதன் அறிமுகம் மற்றும் தொடக்க விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய திருநாவுக்கரசர், பிப்ரவரி 2-வது வாரம் ராகுல்காந்தி தமிழகம் வருவதாகக் கூறினார். காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்றும், பா.ஜ.க.வில் அப்படி ஒரு நிலைமை இல்லை என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார்.