​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு வியாழனன்று கூடுகிறது

Published : Jan 21, 2019 7:59 AM

சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு வியாழனன்று கூடுகிறது

Jan 21, 2019 7:59 AM

சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மூன்று நபர் தேர்வுக்குழு வரும் வியாழக்கிழமை கூட உள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா சிறப்பு சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலையடுத்து இவ்விருவரும் தவிர மேலும் சில சிபிஐ அதிகாரிகள் அண்மையில் நீக்கப்பட்டனர். இதனையடுத்து தேர்வுக்குழு கூடி புதிய இயக்குனரை அறிவிக்க உள்ளது.

புதிய இயக்குனர் பொறுப்புக்கான பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜே.கே. சர்மா மற்றும் பரமிந்தர் ராய் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரியின் பின்புலத்தையும் அவர் கையாண்ட வழக்குகள், சந்தித்த சவால்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.