​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோயில் தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Published : Jan 20, 2019 2:38 PM

செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோயில் தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Jan 20, 2019 2:38 PM

செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நெல்லை மாவட்டம் குலசேகரநாத சுவாமி கோயிலில் கடந்த 12 ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்கியது. தினமும், அம்பாளுக்கு, காமதேனுவாகனம், சிங்க வாகனம், ரிஷப வாகனம், பூங்கோயில் வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் விநாயகர், சுவாமி, ”தர்ம சம்வர்தினி அம்பாள்” 3 தேர்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.