​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை சீர்செய்த காவலர்கள் மீது அரசுப் பேருந்து மோதியது

Published : Jan 19, 2019 7:27 PM

சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை சீர்செய்த காவலர்கள் மீது அரசுப் பேருந்து மோதியது

Jan 19, 2019 7:27 PM

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த இரு காவலர்கள் மீது அரசுப் பேருந்து மோதியது.

ஆயுதப்படையில் பணிபுரியும் செல்லத்தங்கம் மற்றும் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த அருண் முருகன் ஆகியோர் கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அருண் முருகன் சாலையின் நடுவே சென்று அவ்வழியாகச் சென்ற வாகனங்களை நிறுத்தி, சாலையைக் கடப்பவர்களுக்கு உதவினார். அப்போது அதிவேகத்தில் கல்பாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியதுடன் செல்லத்தங்கம்  மீதும் மோதி நின்றது.

படுகாயம் அடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் கந்தசாமி கைது செய்யப்பட்டார்.