​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“நானும் ராஜபுத்திரரே , மணிகர்னிகா படத்தை எதிர்க்கும் கார்னி சேனையரை அழிப்பேன்” - கங்கனா ரனாவத் எச்சரிக்கை

Published : Jan 18, 2019 7:19 PM

“நானும் ராஜபுத்திரரே , மணிகர்னிகா படத்தை எதிர்க்கும் கார்னி சேனையரை அழிப்பேன்” - கங்கனா ரனாவத் எச்சரிக்கை

Jan 18, 2019 7:19 PM

தாமும் ராஜபுத்திர வம்சம் தான் என்பதால் மணிகர்னிகா திரைப்படத்தை எதிர்க்கும் ஒவ்வொரு கார்னி சேனையர்களையும் அழிப்பேன் என நடிகை கங்கனா ரனாவத் எச்சரித்துள்ளார்.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இயக்குநர்கள் கிரிஷ், கங்கனா ரனாவத் இயக்கி தயாரித்த மணிகர்னிகா திரைப்படம் வெளியாகிறது.

இதில் ஏதேனும் பிரிட்டிஷ்காரரைக் காதலிப்பதைப் போல் சித்தரித்திருந்தால் படக்குழுவினர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பத்மாவத் படத்தை எதிர்த்த அதே கார்னி சேனா அமைப்பினர் எச்சரித்திருந்தனர்.

4 வரலாற்று ஆய்வாளர்களின் முன்னிலையில் திரையிடப்பட்டு படத்துக்கு தணிக்கைச் சான்று கிடைத்துள்ளதாகக் கூறியும், கார்னி சேனாவினர் தம்மைத் தொடர்ந்து துன்புறுத்துவதாக கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

இந்த போக்கை நிறுத்தாவிட்டால் ஒவ்வொருவரையும் அழிப்பேன் என எச்சரித்துள்ளார். தாக்கரே படம் வெளியாகும் வரும் 25-ஆம் தேதியே மணிகர்னிகா படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.