​​ மயிலுடன் விமானத்தில் ஏற முயன்ற பெண்மணிக்கு அனுமதி மறுப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலுடன் விமானத்தில் ஏற முயன்ற பெண்மணிக்கு அனுமதி மறுப்பு

மயிலுடன் விமானத்தில் ஏற முயன்ற பெண்மணிக்கு அனுமதி மறுப்பு

Feb 01, 2018 11:57 AM

அமெரிக்காவில், தனது செல்லப்பிராணியான மயிலை, விமானத்தில் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால் பெண் ஒருவர் ஏமாற்றமடைந்தார். நியூயார்க்கைச் சேர்ந்த வென்டிகோ என்பவர் நியூஜெர்சியில் இருந்து லாஸ்ஏஞ்சலிஸ் செல்ல வேண்டியிருந்த நிலையில், தன்னுடைய மயிலான டெக்ஸ்டருடன் விமான நிலையம் வந்தார். தனக்கும் மயிலுக்கும் வென்ட்டிகோ பயணச்சீட்டு எடுத்திருந்த போதும், யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மயிலுக்கு அனுமதி இல்லை என மறுத்து விட்டது.

இந்த விவரங்களை தாங்கள் ஏற்கனவே தெரிவித்த போதிலும், மயிலுடன் அவர் விமான நிலையம் வந்து விட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 6 மணி நேரம் அதிகாரிகளுடன் போராடித் தோற்றுவிட்டதாக, வென்ட்டிகோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.