​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மறுமணம் செய்ய மறுத்த விதவைப் பெண் மீது ஆசீட் வீச்சு

Published : Jan 18, 2019 10:26 AM



மறுமணம் செய்ய மறுத்த விதவைப் பெண் மீது ஆசீட் வீச்சு

Jan 18, 2019 10:26 AM

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஆசிட் வீச்சுக்குள்ளான விதவைப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது ஆசிட் வீசிய நபர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

திருவட்டாறு அருகே உள்ள ஏற்றக்கோட்டைச் சேர்ந்த கிரிஜா கணவனை இழந்த நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த கொத்தனார் ஜான் ரோஸ் என்பவன் கிரிஜாவிடம் தன்னை மறுமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளான்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த கிரிஜா, ஜான்ரோஸ் மீது காவல்நிலையத்தில் ஓராண்டுக்கு முன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஜான் ரோஸ் கிரிஜா மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான்.

காயமடைந்த கிரிஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே ஆசிட் வீசிய ஜான் ரோஸ் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டான். ஆசிட் வீச்சு மற்றும் தற்கொலை குறித்துத் திருவட்டாறு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.