​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசூரில் பனிப்பொழிவால், மாம்பூக்கள் கருகி உதிர்வதாக விவசாயிகள் வேதனை

Published : Jan 18, 2019 7:39 AM



ஓசூரில் பனிப்பொழிவால், மாம்பூக்கள் கருகி உதிர்வதாக விவசாயிகள் வேதனை

Jan 18, 2019 7:39 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மாம்பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா உள்ளிட்ட 30 வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் மாம்பழங்கள் வெளியூர் சந்தைகளுக்கு அனுப்பப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நடப்பு ஆண்டில், மாமரங்களில் பூக்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குவதால், மகசூல் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது பொழியும் கடும் பனியால், ஏராளமான மாம்பூக்கள் கருகி உதிர ஆரம்பித்துள்ளன.

இதனால், எதிர்பார்த்ததைவிட, மிகவும் குறைந்த அளவே மகசூல் இருக்கும் என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், தேவையான மருந்துகளை பரிந்துரைக்குமாறு, வேளாண் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.