​​ சிட்னியில் 6 பேர் பலியாகக் காரணமான கடல் விமான விபத்தில் மர்மம் இருப்பதாக விமான நிறுவன நிர்வாகி கருத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிட்னியில் 6 பேர் பலியாகக் காரணமான கடல் விமான விபத்தில் மர்மம் இருப்பதாக விமான நிறுவன நிர்வாகி கருத்து

சிட்னியில் 6 பேர் பலியாகக் காரணமான கடல் விமான விபத்தில் மர்மம் இருப்பதாக விமான நிறுவன நிர்வாகி கருத்து

Jan 31, 2018 3:13 PM

சிட்னியில் 6 பேர் பலியாகக் காரணமான கடல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மர்மம் இருப்பதாக விமான நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார். கடந்த புத்தாண்டன்று சிட்னி நகரில் இருந்து சி ப்ளேஎன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடல் விமானத்தில் விமானி கரேத் மோர்கன் ((Garetha Morgan)) உட்பட 6 பேர் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த விமானம் சவுத்வேல்ஸ் மாகாணம் கோவன் நகர் அருகே ஹாக்கெஸ்பரி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்குத்தான நிலப்பரப்பை ஒட்டிய இப்பகுதியில் விமானம் புறப்படவோ, இறங்கவோ தங்கள் நிறுவனம் அனுமதிப்பதில்லை என்றும் அனுபவம் மிக்க விமானியான கரேத் மோர்கனுக்கு இது தெரியும் என்ற நிலையில் விபத்தில் மர்மம் இருப்பதாகவும் சீ ப்ளேன் நிர்வாகி ஆரோன் ஷா தெரிவித்துள்ளார்.