​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சில மாநில கட்சிகளுடன் பேச்சு - டிடிவி தினகரன்

Published : Jan 17, 2019 11:12 AM

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சில மாநில கட்சிகளுடன் பேச்சு - டிடிவி தினகரன்

Jan 17, 2019 11:12 AM

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக சில மாநிலக் கட்சிகளிடம் பேசி வருவதாகவும், கூட்டணி அமையவில்லை என்றால், அமமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு சர்ச்சை விவகாரத்தில் குற்றம்சாட்டிய 2 பேர் மீது அவசர அவசரமாக கைது நடவடிக்கை எடுத்தது சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக கூறினார்.

அதிமுகவும் திமுகவும் தொடர்பில் இருப்பதாகவும், அதனால்தான் திமுக எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஜெயக்குமாருக்கு தெரிந்திருக்கிறது என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

திமுக எம்எல்ஏக்கள் கேட்கிற காண்ட்ராக்ட் வழங்கப்படுவதாகவும், ஜெயக்குமார் வாயாலேயே உண்மை வெளிவந்து விட்டதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.