​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட நீரவ் மோடி தப்ப முடியாது - நிர்மலா சீதாராமன் உறுதி

Published : Mar 30, 2018 12:49 PM



வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட நீரவ் மோடி தப்ப முடியாது - நிர்மலா சீதாராமன் உறுதி

Mar 30, 2018 12:49 PM

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் எந்தவிதமான ஊழலும் இல்லை என்று கூறிய அவர், அரசின் அனைத்து முடிவுகளும் கொள்கையளவிலானதுதான் என்றும் தெரிவித்தார். டெல்லியில் ஆங்கில நாளிதழ் குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பேசிய நிர்மலா சீதாராமன், நீரவ் மோடியும், மெஹூல் சோக்சியும் தப்பிவிட முடியாது என்று தெளிவுபடுத்தினார். மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தியது போல் பல்வேறு துணிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தயங்காது என்றும் நிர்மலா சீதாராமன் அப்போது குறிப்பிட்டார்.