​​ பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவுள்ளார் நிதியமைச்சர்: மத்திய நிதியமைச்சகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவுள்ளார் நிதியமைச்சர்: மத்திய நிதியமைச்சகம்

பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவுள்ளார் நிதியமைச்சர்: மத்திய நிதியமைச்சகம்

Jan 31, 2018 3:11 PM

பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நாளை டுவிட்டர் மூலம் அருண் ஜேட்லி பதிலளிக்க இருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு நாளை இரவு 7 மணிக்கு பதில் அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதியமைச்சகம், பொதுமக்கள் தங்களது கேள்விகளை ask your fm என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.