​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published : Jan 16, 2019 11:27 AM

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Jan 16, 2019 11:27 AM

சேலத்தில் 80இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர்,ஜெயலலிதா மணிமண்டபத்த் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் அண்ணா பூங்கா அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச் சிலைகளுடன் 80 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு 5 சிற்றுந்துகளின் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களே காரணம் எனத் தெரிவித்தார். சேலம் ஓமலூர்ச் சாலைக்கு எம்ஜிஆர் சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார்.