​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல்

Published : Jan 15, 2019 6:58 PM

கனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல்

Jan 15, 2019 6:58 PM

கனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல் உருவாகி உள்ளது.

கனடாவைச் சேர்ந்த 36 வயதான ராபர்ட் என்பவர் 227 கிலோ போதை பொருளை கடத்த முயன்றதாக சீனா காவல்துறையால் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவருக்கு சீன உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய ராபர்ட்டுக்கு 10 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தண்டனையால் இரு நாட்டு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று, ஹூவாய் செல்போன் நிறுவன உரிமையாளர் மகளை கனடா அரசு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.