​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்பேட்டில் பூ, பழம், காய்கறி ஆகியவற்றுக்குத் தனித்தனிச் சந்தைகள்

Published : Jan 14, 2019 1:36 PM

கோயம்பேட்டில் பூ, பழம், காய்கறி ஆகியவற்றுக்குத் தனித்தனிச் சந்தைகள்

Jan 14, 2019 1:36 PM

சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனையின் இறுதிநாளான இன்று பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.இங்கு பூ, பழம், காய்கறி ஆகியவற்றுக்குத் தனித்தனியாகச் சந்தைகள் உள்ளன.

இவை தவிரப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யப் பூச்சந்தைக்கு அருகே 7ஏக்கர் நிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழைக்கன்று, வாழையிலை, மாவிலை, தென்னங்கீற்றுத் தோரணங்கள் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன.

image

கரும்புக் கட்டுகள் லாரிகளில் இருந்தே நேரடியாக வணிகர்களுக்கும் பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர். 20கரும்புகள் கொண்ட ஒரு கட்டு முந்நூறு ரூபாய் முதல் 450ரூபாய் வரை விற்கப்படுகிறது. மஞ்சள்குலை 80ரூபாய்க்கும், இஞ்சிக் குலை 50ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. வாழைத் தார் நானூறு ரூபாய் முதல் அறுநூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது.

image

செவ்வந்திப் பூ கிலோ 120ரூபாய்க்கும், ரோஜாப் பூ கிலோ 120ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ அறுநூறு ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்து எண்ணூறு ரூபாய்க்கும் சம்பங்கிப்பூ கிலோ 150ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.