​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உசிலம்பட்டியில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000

Published : Jan 14, 2019 10:14 AM

உசிலம்பட்டியில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000

Jan 14, 2019 10:14 AM

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூச்சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிலோ 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் உசிலம்பட்டி பூச்சந்தைக்கு இன்று 7 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் காரணமாக மல்லிகைப் பூவின் விலை கிலோ 3 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.

இதை அடுத்து மல்லிகைப் பூ வாங்கி வருவதற்காக மதுரை மாட்டுத்தாவணி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் உள்ள பூச்சந்தைக்கு வியாபாரிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதேவேளையில் மற்ற பூக்களின் விலைகள் சரிந்துள்ளன.

பிச்சி பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.