​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எதிர்க்கட்சியினரை ஒன்றுமில்லாமல் துடைத்தெறிவோம் - யோகி ஆதித்யநாத்

Published : Jan 14, 2019 6:36 AM

எதிர்க்கட்சியினரை ஒன்றுமில்லாமல் துடைத்தெறிவோம் - யோகி ஆதித்யநாத்

Jan 14, 2019 6:36 AM

எதிர்க்கட்சியினரை மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடித்து துடைத்தெறியும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சூளுரை செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதையடுத்து காங்கிரஸ் கட்சி 80 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் என்றார். இரு கட்சிகளையும் ஒன்றாக துடைத்தெறிவோம் என்றும் அவர் சபதமிட்டார்.

ஊழலில் ஊறிய இரண்டு கட்சிகளையும் பாஜக எதிர்கொள்வது எளிது என்று கூறிய அவர், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மாயாவதியா, முலாயம் சிங்கா எனக் கேள்வி எழுப்பினார்.