​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார்

Published : Jan 14, 2019 6:29 AM

பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார்

Jan 14, 2019 6:29 AM

பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். முன்னாபாய் உள்ளிட்ட படங்களின் இயக்குனரான ராஜ்குமார் அண்மையில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட சஞ்சு என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அப்படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பெண் ஒருவர், இயக்குனர் ராஜ்குமார் மீது புகார் தொடுத்து, படத்தின் சக தயாரிப்பாளரான விது வினோத் சோப்ராவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.

கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், பல முறை தமது தந்தை வயதான ராஜ்குமார் ஹிரானி தம்மிடம் அத்துமீறி நடந்துக் கொண்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ராஜ்குமார் ஹிரானி தரப்பினர் மறுத்துள்ளனர்.