​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் ஏறுமுகம்

Published : Jan 13, 2019 7:22 AM

பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் ஏறுமுகம்

Jan 13, 2019 7:22 AM

பெட்ரோல்-டீசல் விலை இறங்குமுகமாக இருந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 52 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 39 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 63 காசுகள் உயர்ந்து 67 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த சில நாட்களாக குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.