​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Rafale போர் விமானங்களின் விலையை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன்

Published : Mar 29, 2018 9:32 PM



Rafale போர் விமானங்களின் விலையை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன்

Mar 29, 2018 9:32 PM

பாதுகாப்பு காரணங்களுக்காக ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரங்களை வெளியிட முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைத் திருப்திப்படுத்துவதற்காக நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். 

இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டவற்றில், மிகச் சிறந்த உதாரணமாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் திகழ்வதாகவும், தயாரிப்பு, விலை இரண்டிலுமே மிகச் சரியான நடைமுறைகள் கையாளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசுக்கு எதிராக ஏதாவது ஆதாரங்கள் கிடைக்குமா என்று ராகுல்காந்தி தேடிக்கொண்டிருப்பதாகவும், அதுபோன்ற எதுவும் அவருக்கு கிடைக்கப் போவதில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.