​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
16 அரசு பள்ளிகளின் மாணவர்கள் யோகா, நடனம் பல்வேறு சாதனை முயற்சிகள்

Published : Jan 12, 2019 7:41 PM

16 அரசு பள்ளிகளின் மாணவர்கள் யோகா, நடனம் பல்வேறு சாதனை முயற்சிகள்

Jan 12, 2019 7:41 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சாதனை முயற்சிகளில் ஈடுபட்டனர்.

வந்தவாசியை அடுத்த மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 346 மாணவர்கள் பத்மாசனம், வஜ்ராசனம், கோமுக ஆசனம், சலபாசனம், நவுக்காசனம், தடாசனம், உட்கடாசனம், பவனமுத்தாசனம் உள்ளிட்ட 30 ஆசனங்களை 30 நிமிடங்களில் செய்தனர்.

உலகிலேயே அதிக மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையில் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 

செய்யாறை அடுத்த திருவத்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியின் 500 மாணவ, மாணவியர் நாற்காலிகளை வைத்து நடனமாடினர்.