​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயனாளிகளின் தகவல்களை 2012ஆம் ஆண்டே விற்க முடிவு செய்த பேஸ்புக்?

Published : Jan 12, 2019 7:13 PM

பயனாளிகளின் தகவல்களை 2012ஆம் ஆண்டே விற்க முடிவு செய்த பேஸ்புக்?

Jan 12, 2019 7:13 PM

பேஸ்புக் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டே பயனாளிகளின் விவரங்களை விற்பனை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்ஸ் டெக்னிக்கா என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனாளிகளின் தகவல்களை மிகப்பெரிய நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்ய, பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டதாகவும், ஆனால், அதன்பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பேஸ்புக் நிறுவனம், தங்கள் மீதான நியாயத்தை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.