​​ முதலமைச்சர் ஒரு ஈயைக் கூட அடிக்க மாட்டார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் ஒரு ஈயைக் கூட அடிக்க மாட்டார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published : Jan 12, 2019 6:51 PM

முதலமைச்சர் ஒரு ஈயைக் கூட அடிக்க மாட்டார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Jan 12, 2019 6:51 PM

முதலமைச்சர் ஒரு ஈக்கு கூட துன்பம் நினைக்க மாட்டார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில் பால் தொடக்க கூட்டுறவு பணியாளர்களுக்கான போனஸ், இனிப்பு, நெய் உள்ளிட்டவை வழங்கிய பின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, கொடநாடு வீடியோ வெளியான விவகாரத்தில் யாரோ ஒருவர் திட்டமிட்டு முதலமைச்சர் மீது அவதூறு பரப்புவதாக கூறினார். முதலமைச்சர் கத்தியால் குத்துவது போலவோ அல்லது சுவர் ஏறி குதிப்பது போலவோ  ஆவணப்படத்தில் இல்லை என்றும், விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட பொய்யான வீடியோ அது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.