​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரேசில் வாட்டி வதைக்கிறது கடும் வெயில்

Published : Jan 12, 2019 6:49 PM

பிரேசில் வாட்டி வதைக்கிறது கடும் வெயில்

Jan 12, 2019 6:49 PM

அமெரிக்கா பனிப் பொழிவால் தவித்து வருகையில் தென் அமெரிக்காவில்  உள்ள பிரேசில் நாட்டில் வெயில் வாட்டி வதைக்கிறது.

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் வெயிலின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி அன்று ரியோ டி ஜெனிரோ நகரின் பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த நிலையில் 12-ஆம் தேதி அன்று இது 101 டிகிரியாக மாறி உள்ளது. இதனால் கடற்கரையில் காற்று வாங்கியும், கடலில் நீந்தி குளித்தும், கரும்பு சாறு அருந்தியும், அங்குள்ளவர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகின்றனர்.