​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிட்னி கிரிக்கெட் போட்டியில் டோனி 10000 ரன்களை கடந்தார்

Published : Jan 12, 2019 6:00 PM

சிட்னி கிரிக்கெட் போட்டியில் டோனி 10000 ரன்களை கடந்தார்

Jan 12, 2019 6:00 PM

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் ஆட வந்த டோனி, ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டோனி இந்த போட்டியில் முதல் ரன்னை எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்பு, சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.