​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கும்படி நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Published : Jan 12, 2019 4:51 PM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கும்படி நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Jan 12, 2019 4:51 PM

நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கும்படி நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சாலைகளை மறித்தும், நடைபாதைகளை ஆக்கிரமித்தும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புக்காக நடவடிக்கை எடுக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

உத்தரவை முறையாக அமல்படுத்தாத தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளர், சென்னை, கோவை மாநகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, மனு தொடர்பாக அடுத்த மாதம் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.