​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட், 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி

Published : Jan 12, 2019 4:22 PM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட், 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி

Jan 12, 2019 4:22 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா, மார்ஷ், ஹேண்ட்ஸ்ஹோம்ப் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே வரிசையாக 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ரோகித் சர்மாவும், மகேந்திரசிங் தோனியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடி காட்டிய ரோகித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 22வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அரைசதம் அடித்தபடி தோனியும் அவுட்டாக, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா போன்ற நடுவரிசை வீரர்களும் நிலைக்கவில்லை.

கடைசிவரை போராடிய ரோகித் சர்மாவும் 133 ரன்னில் ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றது.