​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களை நேரில் அழைத்து பாரட்டினார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

Published : Jan 12, 2019 4:14 PM

கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களை நேரில் அழைத்து பாரட்டினார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

Jan 12, 2019 4:14 PM

சென்னையில் கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய காவலர்களை, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் காரில் கடத்தப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை மீட்ட போலீசார், கடத்தல் வழக்கில் 7 பேரை கைது செய்தனர். அதேபோல் வேப்பேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை சோழிங்கநல்லூரியில் கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நடுசாலையில் திடீரென தீப்பிடித்தபோது, சிறப்பாக செயலாற்றி, போக்குவரத்துக் காவலர் ஒருவர் தீயை அணைத்தார்.

இந்த சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை நேரில் அழைத்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், வெகுமதியும் வழங்கினார்.