​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிகரிப்பு

Published : Jan 12, 2019 3:50 PM

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை அதிகரிப்பு

Jan 12, 2019 3:50 PM

கோயம்பேடு காய்கறிச் சந்தையில், தக்காளி விலை அதிகரித்துள்ளது. நாட்டுத் தக்காளி கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது.

வரத்து குறைவால விலை உயர்ந்து இருப்பதாக வணிகர்கள் கூறியுள்ளனர். உருளைக் கிழங்கு கிலோ 18 ரூபாய் வரைக்கும், பீன்ஸ், அவரைக்காய் போன்றவை 35 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. 45 ரூபாய்க்கு வெண்டைக்காய் விற்பனையாகிறது.

இஞ்சி, மஞ்சள் குலைகள் 50 ரூபாய் வரையிலும், கரும்புக் கட்டு 250 ரூபாய் தொடங்கி 450 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். பழங்களைப் பொருத்தவரையில் ஆப்பிள் கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மலர் வகைகளில், மல்லி கிலோ ஆயிரத்து 300 ரூபாய், கனகாம்பரம் 500 ரூபாய், ஜாதி மல்லி 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது