​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுக்கு எதிராக வழக்கு தொடர்வது திமுகவுக்கு வாடிக்கையாகி விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published : Jan 12, 2019 2:29 PM

அரசுக்கு எதிராக வழக்கு தொடர்வது திமுகவுக்கு வாடிக்கையாகி விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Jan 12, 2019 2:29 PM

அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு வழக்கை தொடர்ந்து கொண்டேயிருப்பது திமுகவுக்கு வாடிக்கையாகி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொழிற்சாலைகள் வரவில்லை என்று குறைகூறிக்கொண்டே, தொழிற்சாலைகள் வருவதையும் திமுக தடுக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார். 

உள்ளாட்சித் தேர்தல் தடைபடுவதற்கு அதிமுக அரசு காரணம் அல்ல என்றும், ஊராட்சி சபை கூட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நடத்துவது அரசியல் நாடகம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.