​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

Published : Jan 12, 2019 2:01 PM

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

Jan 12, 2019 2:01 PM

மன்னார்குடியில், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், மாவட்ட காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் அனைத்து சேவை சங்கங்கள் சார்பில்

போக்குவரத்து விதிகள் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில், போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள், இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பங்கேற்று, துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணியாக சென்றனர்.