​​ இரவில் காரை நோட்டமிட்டு திருடிச் செல்லும் திருடர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரவில் காரை நோட்டமிட்டு திருடிச் செல்லும் திருடர்கள்

Published : Jan 12, 2019 1:16 PM

இரவில் காரை நோட்டமிட்டு திருடிச் செல்லும் திருடர்கள்

Jan 12, 2019 1:16 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இரவில் காரை நோட்டமிட்ட திருடர்கள் அதைத் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரங்க சமுத்திரம் ஜல்லிக்குழி வீதியைச் சேர்ந்த செந்தில், வழக்கம்போல் தெருவோரம் தமது காரை நிறுத்திச் சென்றார். கடந்த 6-ம் தேதி 10.11 மணிக்கு காரைத் திருட வந்த போது, அருகிலிருந்த வீட்டில் வசித்த பெண் ஒருவர், எட்டிப்பார்த்தார். இதைப் பார்த்துவிட்ட திருடன் காருக்கு அருகே சென்று பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுகிறார்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த திருடர்கள் கள்ளச்சாவி போட்டு காரைத்திருடிச் சென்றனர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் செந்தில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை வழக்கு கூட பதியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.