​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சரக்கு லாரி மோதி, பேருந்து நிறுத்தம் உடைந்து நொறுங்கியதில் 2 மாணவிகள் காயம்

Published : Jan 12, 2019 1:08 PM

சரக்கு லாரி மோதி, பேருந்து நிறுத்தம் உடைந்து நொறுங்கியதில் 2 மாணவிகள் காயம்

Jan 12, 2019 1:08 PM

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே பேருந்து நிறுத்தம் மீது லாரி மோதியதில், பேருந்து நிறுத்தம் உடைந்து நொறுங்கி, அதில் நின்று கொண்டிருந்த 2 மாணவிகள் காயம் அடைந்தனர்.

திருவாலங்காடு அருகே வீரராகவபுரம் பேருந்து நிறுத்தத்தில் 2 மாணவிகள் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த சரக்கு லாரி, பேருந்து நிறுத்தத்தின் மீது மோதியுள்ளது. இதில், பேருந்து நிறுத்தம் நொறுங்கி விழுந்த நிலையில், மாணவிகள் 2 பேரும் காயமடைந்தனர்.

இதையறிந்த பொதுமக்கள் உடனடியாக மாணவிகள் யாமினி மற்றும் மகேஸ்வரியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், லாரி ஓட்டுநரைப் பிடித்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.