​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதல் ஜோடி

Published : Jan 12, 2019 10:01 AM



பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதல் ஜோடி

Jan 12, 2019 10:01 AM

தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

விகரபாத்தைச் சேர்ந்த நவாசும், அதே பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா பேகமும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரேஷ்மா பேகம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் ரேஷ்மா அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த நவாசும் பூச்சி மருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு வீட்டாரின் பெற்றொர் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இதையடுத்து, விகரபாத்தில், இருவரும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே, நவாஸ், ரேஷ்மா பேகம் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.