​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் சிக்கியது

Published : Jan 12, 2019 8:41 AM



போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் சிக்கியது

Jan 12, 2019 8:41 AM

போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 ஏஜெண்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் குடியிருப்பில் சோதனை நடத்திய மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் போலி பாஸ்போர்ட் தயாரிப்பவர்கள் என தெரியவந்ததையடுத்து, போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னையைச் சேர்ந்த சந்திரன், மதுரையைச் சேர்ந்த பாரதிராஜா மற்றும் அதிரதன், திருச்சியைச் சேர்ந்த அறிவழகன் ஆகியோர் என தெரிய வந்தது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 9 போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் ஏஜெண்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள் அதைத் தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.