​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய விவகாரம், கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் சஸ்பெண்ட்

Published : Jan 11, 2019 6:15 PM

தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய விவகாரம், கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் சஸ்பெண்ட்

Jan 11, 2019 6:15 PM

தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஆபாசமாகவும், பெண்கள் குறித்து இழிவாகவும் பேசிய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் இருவரும் அந்தரங்க விவகாரங்களையும், நடிகைகள், பெண்கள் குறித்து இழிவாகவும் பேசினர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்ட்யா, நிகழ்ச்சியின் இயல்புக்கு ஏற்றபடி பேசியதாகவும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.