​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா நினைவிடத்தில் பணியாற்றியவர்களிடம் செல்போன் திருடியவர் கைது

Published : Jan 11, 2019 8:08 AM



ஜெயலலிதா நினைவிடத்தில் பணியாற்றியவர்களிடம் செல்போன் திருடியவர் கைது

Jan 11, 2019 8:08 AM

சென்னை திருவல்லிக்கேணியில் செல்போன்களைத் திருடியவரை வீடியோ கால் மூலம் பேசி இளைஞர்கள் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருமன் குட்டையைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன்.

இவர் ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அருகில் இருந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு நுழைந்த மர்ம நபர், வெள்ளையப்பன் மற்றும் அவரது நண்பர்களின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 செல்போன்களைத் திருடிச் சென்றார்.

இதையடுத்து திருடப்பட்ட செல்போனுக்கு மற்றொரு செல்போன் மூலம் வெள்ளையப்பன் வீடியோ கால் செய்துள்ளார். அதில் பேசிய நபரை கண்டறிந்த அவர்கள், திருடனைப் பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கோவை மாவட்டம் கருப்பண்ண கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நல்லி வீரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து, அவனிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.